சமீபத்திய செய்திகள்

பிரதேசப் பற்றும் அதன் எல்லைகளும் ! Featured

21 Oct 2015 M.S.Mohamed Ikrima
140608 times

பிரதேசப் பற்றும் அதன் எல்லைகளும் !


அண்மையில் முக நூலில் நாம் பதிவிட்ட ஒரு சம்பாசனையை அடுத்து எமதூரில் அதுபற்றிய கருத்தாடல்கள் சு10டுபிடடித்திருந்தன. அதில் எழுப்பப்பட்ட ஒரு விடயம்தான் பிரதேச வாதம் என்பது. அது இப்போது தெளிவுபடுத்தப்படவேண்டீய தேவை எழுந்துள்ளது. இதனால் இப்பதிவை எழுதுகிறோம்.


உலகில் மனிதனாகப் பிறந்துள்ள ஒவ்வொருவரும் தான் சாந்துள்ள இடம், இனம், குடும்பம், கோத்தரம், பிரதேசம், நாடு …… என தனது அபிமானத்தைக் காட்டுகின்றான். இவ்வுனர்வு மனிதனில் மாத்திரமல்ல சிங்கம் புலி முதல் சிறிய உயிரிகள் வரை வெளிக்காட்டப்படுவதை நாம் அறிவோம். உதாரணமாக ஒரு குறித்த புலிக்கூட்டம் வாழும் பிரதேசத்தினுள் அயற் பிரதேசங்களில் வாழும் புலிகள் நுழைவதை ஒருபோதும் அனுமதிப்பது கிடையாது. மனிதனில் இவைகள்தான் பல்வேறு வடிவங்களில் தேசாபிமாணம், தேசியவாதம், பிரதேச வாதம், பிரதேச வெறி, ஊர் பற்று, மண்வாசனை, இனவாதம், இனப்பற்று, இன வெறி … என்றெல்லாம் பல்வேறு மாறுபட்ட சந்தர்ப்பங்களில் வெளிக்காட்டப்படுகின்றன.இவை வெளிக்காட்டப்படும் சந்தர்ப்பங்கள், நோக்கங்கள், மற்றும் இதன் வீரியம் (தீவிரத்தண்மை) என்பவற்றைப் பொறுத்து அதன் விளைவுகளும் மாறுபடுகின்றன. ஒன்றில் அது
1. ஒரு உரிமைக்குரலாக ஒலிக்கின்றது. அல்லது
2. ஒரு உரிமைப்போராட்டமாக வெளிக்காட்டப்படுகின்றது. அல்லது
3. தீவிரவாதமாக உருவெடுக்கின்றது. அல்லது
4. மனிதத்தை மீறிய ISIS போன்ற போராட்டங்களாக படமெடுத்தாடுகின்றது. அல்லது
5. தனது சமூகத்தை தட்டி விழிபூட்டுகின்றது. அல்லது
6. புரட்சியொன்றாக வெடிக்கின்றது.
7. சண்டை சச்சரவில் முடிகின்றது.
8. அல்லது வெட்டுக்குத்துகளுக்கு இட்டுச்செல்லுகின்றது.

இது தவிர இன்னும் பல வடிவங்களில் இவ்வுணர்வு வெளிக்காட்டப்படுகின்றது. இது சாதாரண அண்டைவீட்டிலிருந்து அயல்நாடுகள் வரை வியாபித்திருப்பதனை நாம் காணமுடீகின்றது.இவ்வுணர்வு ‘பற்று’ என்றோ ‘வாதம்;’ என்றோ ‘வெறி’ என்றோ அடையாளப்படுத்தப்படுகின்றன. இப்பதங்கள் அதன் தீவிரத்தண்மையின் அடிப்படையில் பின்வருமாறு ஏறுவரிசைப்படுத்தப்படலாம். ‘பற்று’ ஈ ‘வாதம்;’ஈ‘வெறி’.

பற்று அல்லது அபிமாணம் என்பது வெளிக்காட்டப்படும் வீரியத்தையும் முறையையும் பொறுத்து அது வாதமாகவோ வெறியாகவோ கூர்படையும் இயல்புகொண்டது. சில வேளை இம்மூன்று விடய்ங்களும் ஒன்றிலிருந்து ஒன்று இலகுவாக வேறுபிரித்தறிவுது கடடினமாகவும் இருப்பதனை நாம் மறுக்கமுடியாது. எனவே அவைகளுக்கிடையில் தெளிவான பிரிகோட்டைவரைவது கடினமாகும். சில சந்தர்ப்பங்களில் அவற்றில் ஒன்றோ இரண்டோ அல்லது மூன்றுமோ ஒன்றுடன் ஒ;னறு கலந்த கலவையாகவும் வெளிக்காட்டப்படுகின்றன.

இங்கு இன்னொரு முக்கியவிடயமும் ஊன்றி விளக்கப்படல் வேண்டும். அதாவது ஒருவருடைய பார்வையில் பற்று எனத்தோன்றும் ஒரு விடயம் இன்னொருவரது பார்வையில் வாதமாக அல்லது வெறியாக தென்படுவதனை நாம் காணமுடியும்.

இன்னொருவகையில் இதை சொல்லப்போனால். ஒருவரது பார்வையில் உரிமைப்போராட்டமாகத் தென்படுவது இன்னொருவரது பார்வையில் பயங்கரவாதமாகத் தென்படுகின்றது. இவற்றிற்கு சிறந்த உதாரணங்களாக இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம், பலஸ்தீனப் போராட்டம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இது கால, சூழல் மற்றும் அரசியல், சமூக, கலாசார, நாகரீக பின்புலங்களால் வரையறை செய்யப்படுகின்றன. இங்கு கூறப்பட்ட எந்தப்பார்வை பொதுசன அபிப்பிராயமாக வடிவமைக்கப்படுகின்றது என்பதனை தம் வசமுள்ள ஊடகப்பலம் தீர்மாணிக்கின்றது.

எனவே ஒரு இனத்துவ (Ethnic Sensitive), பிரதேசத்துவ (Area Sensitive) விடயங்கள் மேற்சொன்ன விடயங்களின் பின்னணியில் நின்று புரியப்படும்போதுதான் ஒரு நடுநிலையான பார்வையைப் பெற்றுக்கொள்ள முடியும். இல்லாவிட்டால். உரிமைப்போராட்டம் பயங்கரவாதமாகத் தோற்றமளிப்பதும், பயங்கரவாதம் உரிமைப்போராட்டமாக காட்சியளிப்பதும், பிரதேசப் பற்று பிரதேச வெறியாகப் பார்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

இதன் தொடரில்தான் பிரதேசவாதம் என்பதை நாம் விரிவாக ஆராய வேண்டும். ஒரு மனிதன் தான் பிறந்த ஊரை, பிரதேசத்தை, நாட்டை, இனத்தை நேசிக்கவில்லை என்றால் அவன் அங்கு பிறந்தான் என்று சொல்வதற்கே அருகதையற்றவன் என்றுதான் பொருள். இயல்பாகவே அவனை அறியாமலே இவ்வுணர்வு அவனில் சிறுவயதிலிருந்து இழையோட ஆரம்பிக்கின்றது. இதனை அவன் தனது வாழ்வின் பல்வேறு சந்தர்பங்களில் பலவிதமாக வெளிக்காட்டுகின்றான். இது இஸ்லாத்தைப் பொருத்தமட்டிலும் வெறுக்கத்தக்க ஒன்றல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்கூட பல்வேறு சந்தர்ப்பங்கிளில் மற்றைய ஊர்களைவிட தனது ஊரான மக்காவை கூடுதலாக நேசித்துள்ளார்கள். மனிதனின் இந்த உணர்வை நாம் பல்வேறு நடைமுறை உதாரணங்கள்மூலம் நாம் காணமுடியும். தனது பாடசாலைக்கும் இன்னொரு பாடசாலைக்குமிடையில் விளையாட்டடில் போட்டி வந்தால்கூட அவன் தனது பாடசாலையை ஆதரிக்கின்றான். தனது ஊருக்கும் இன்னொரு ஊருக்குமிடையில் சண்டைமூண்டுவிட்டால் அவன் தனது ஊர்சார்பில் சண்டையிடுகிறாhன். தனது இனமா மாற்று இனமா என்று வரும்போது தனது இனத்தை முன்னுரிமைப்படுத்துகிறான்.

தனது நாட்டுக்கும் அயல்நாட்டிற்கும் யுத்தம் மூழுகின்றபோது தனது நாட்டு அணியில் நின்று போராடுவதற்கும் அவன் பின்னிற்பதில்லை. கிரிக்கட், கால்பந்தாட்டப் போட்டிகளில்கூட நாம் இதனை அவதாணிக்க முடியும். இது தவறானதல்ல. இதனை புத்தி சுவாதீனமான யாரும்; பிழையென்று மறுதளிக்கமாட்டார்கள். ஒரு மனிதன் தான், தனது குடும்பம், தனது பிள்ளைகள், பொருளாதாரத்தில் மற்றவர்களைவிட முன்னேறவேண்டும்; கல்வியில் சாதிக்கவேண்டும்; என சிந்திக்கின்றான். இவ்வாறே ஒரு ஊரைச் சார்ந்தவன் தனது ஊர் முன்னணியில் திகளவேண்டும் மற்றவர்களால் சுரண்டப்படக்கூடாது என்று சிந்திப்பதை யார் குற்றமெனக் கூறமுடியும். உண்மையில் அவ்வாறு தனது பற்றை அவன் வெளிக்காட்டாவிட்டால் அவன் தனது குடும்பத்தை தனது தாய் தந்தையரை தான் பிறந்த ஊரை மறுதளிக்கின்றான். அவன் அந்த ஊரில் குடும்பத்தில் பிறந்ததையே அர்த்தமற்றதாக்கின்றான்.

ஆனாலும் இந்தப்பற்று எது வரைசெல்லமுடியும் ? எது வரை அனுமதிக்கப்பட முடியும் என்பதுதான் இங்கு விளங்கப்படவேண்டும். ஒரு மனிதனுக்கு தனது ஊர்மீது தனது குடும்பம் மீது எவ்வளவு உரிமையும் பற்றும் இருக்கின்றதோ அதே அளவு உரிமையும் பற்றும் அயல் வீட்டிற்கும் அயல் கிராமத்திற்குமுண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. இது மறக்கப்படும்போதுதான் பற்று என்பது வாதமாக அல்லது வெறியாக உருமாறுகின்றது. பற்று என்பது இயற்கை நீதியைää மனித தர்மத்தைää மனச்சாட்சியை மீறுகின்றபோது அது வெறியாகப் பீரிடுகின்றது. ஒருவன் தனது பிள்ளையை மற்றப்பிள்ளையைவிட திறமையாக மாற்றுவதற்கு முயற்சிப்பது தனது பிள்ளைமீதுள்ள பற்றின் அடையாலமாகின்றது. ஆனால் அதே தந்தை தவறான வழிகளுடாகää போட்டடியிலுள்ள மாணவருக்கு எதிராக சதிகள் செய்து அவனது உரிமைகளையும் திறமைகளையும் மறுதளித்து தனது பிளையை வெல்லவைக்க முனைவாராயின் அவரது ‘பிள்ளைப் பற்று’என்பது ‘பிள்ளைவெறியாக’ உருவெடுக்கின்றது. இதே போன்று ஒருவர் அனைத்து திறமையும் தகுதியும் கொண்டிருந்தும் அவனைவிட குறைந்த தகுதியுடைய இன்னொருவன் தனது இனம் அல்லது தனது பிரதேசம் என்ற ஒரே காரணத்தினால் பதவியொன்றிற்கு அமர்த்தப்படுவானால் அதுதான் தெளிவான பிரதேசவாதம் அல்லது இனவெறிக்கு உதாரணமாகும்.

எனவே இந்த ஒழுங்கில் சிந்திக்கும்போது ஒரு ஊர்வாசி தனது ஊரின் பொருளாதார வெளிப்பாய்ச்சலைத் தடுக்க, அது மேலும் பொருளாதாரத்தில் நலிவடைவதைத்தடுக்க தனது ஊரவரது கடைக்கு முன்னுரிமையளிக்குமாறு ஊரவரை அறிவுறுத்துவது எந்தவகையில் தவறாகும். இங்கு முன்னுரிமையளித்தல் என்பது உண்மையான பற்றினால் வெளிக்காட்டப்படும் இயற்கை நியதி. ஆனால் அதே நபர் தனது ஊரில் வெளியுரவர் யாரும் கடைபோடக்கூடாது ! இருப்பவர்களையும் விரட்டியடிக்க வேண்டுமென்று கோஷமிடுவது, எமது நாட்டின் யாப்பினால் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படையுரிமையை மீறும் செயலாகும். இஸ்லாத்தையும் மறுக்கும் செயலாகும். எனவே இங்கு அந்த ஊர்வாசி வெளிப்படுத்துவது ஊர்பற்று அல்ல ஊர் வெறி.

இவ்வாறு தனது வெறியை வெளிக்காட்டுவோர் வெளிய10ரவர்கள் தமது ஊரில் குடியேறுவதைக்கூட விரும்பமாட்டார்கள். தொழில் செய்வதையும் விரும்பமாட்டார்கள்.வெளியூர் கலப்புத் திருமனங்களையும் வெறுப்பபார்கள். நாட்டு சட்டத்தாலோ அல்லது .இஸ்லாத்தினாலோ அனுமதிக்கப்படுவிதில்லை. ஆனாலும் தனது ஊரின் பொருளாதார வெளிப்பாய்ச்சலைத்தடுக்க அல்லது குறைக்க பின்வரும் வழிமுறைகளை கையாள்வது பிணக்குகளைத் தவிர்க்கலாம்.

1. வெளியுர் வியாபாரிகளை செல்லாலோ செயலாலோ இம்சிக்காது தனது ஊரவர்களை தமது ஊர் கடைக்காரர்களுக்கு முன்னுரிமையளிக்குமாறு அறிவுறுத்தலாம. அல்லது தூண்டலாம்.
2. மேலும் வெளியுர் வியாபாரிகளை உள்ளுரில் நிரந்தரமாக குடியமருமாறு வேண்டலாம். இதனூடாக அவர்களது பணமும் உள்ளுரில் சுழற்சியடையலாம்.
3. மேலும் உள்ளுராட்சி சபைகளில் உபவிதிகளை (By Laws) ஏற்படுத்துவதனூடாக உள்ளுரில் சில பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ளுதல். உதாரணமாக

அ). விஷேட வரிகளை அவர்களுக்கு விதிப்பதுபற்றி சிந்தித்தல்.
ஆ). உள்ளுர் தொழிலாளிகளை வேலைக்கமர்த்த வேண்டுமென விதித்தல். இதனூடாக எமது ஊர் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவது மட்டுமல்லாது வியாபாரää தொழில் நுனுக்கங்களையும் பயின்றுகொள்வார்கள்.
இ). பருவகால பேமன்ட் வியாபாரத்தால் பாரியளவு உள்ளுர் நிதி வெளிப்பாய்கின்றதென்றால், தொழிலற்றிருக்கும் எமது இழைளஞர்களுக்கு அவ்வியாபாரம் பற்றிய பயிற்சிகளை அளித்து சிறு முதலீடுகளையும் வழங்கி தலைநகரில் மொத்தவிலையில் பொருட்கள் பெறும் இடங்களையும் அறிமுகம் செய்துவிடலாம். இதன்மூலம் அரசியல்வாதிகளையே அன்னார்ந்துபார்த்து அலுத்த இளைஞர்களுக்கு உள்ளுரில் தொழில்வாய்ப்புகளை உருவாக்கலாம். மட்டுமல்லாமல் முதலும் உள்ளுரிலேயே சுழற்சியடையலாம்.

இவ்வாறு செய்வது யாரையும் பாதிக்காது. இது பிரதேச வாதமாகவும் அமையாது.

இதனையும் தாண்டி அந்த ஊரை எதிர்கால பொருளாதார நலிவிலிருந்து காப்பதென்றால் அவர்கள் முன்னுள்ள ஒரே வழி, அந்த ஊர் மக்களை உள்ளுர் கடைக்காரர்களின் கடைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தி விளிப்பூட்டுவதேயாகும்.உள்ளுரவர்களது மனோநிலையை மாற்றுவதுதான் ஒரே வழியாகும். வெளிய10ர் கடைக்காரர்கள் தனது கடையில் ஒரு பொருள் இல்லாவிட்டால் அப்பொருளுக்காக வாடிக்கையாளருக்கு தனது ஊரவன் ஒருவரது கடையையே சிபாரிசு செய்கிறான் என்றால், ஏன் உள்ளுரவன் ஒருவன் தனது ஊரவனது கடைக்கு முன்னுரிமையளி என்று தனது ஊரவரை அறிவுறுத்துவதில் என்ன தப்பு உள்ளது?. இது உண்மையில் முன்னுரிமையளித்தலேயாகும். இது பிரதேசவாதமாகாது அல்லது பிரதேச வெறியாகக் காட்டமுடியாது. இந்த நிலைப்பாட்டை மறுதளிப்போர்

- நமது நாட்டை பொருளாதார ரீதியாக அந்நிய நாடு சுரண்டும்போது குறைந்த விலையில் எமக்கு பொருட்கள் கிடைக்கின்றது என்று மட்டும் கூறி அதை நியாயங்காண வேண்டும்.

 - நமது நாடும் அயல்நாடும் விளையாடும்போது எமது நாட்டிற்கு முன்னுரிமையளிப்போம் என்று கூறக்கூடாது.

- மற்ற குழந்தைகளைவிட தமது குழந்தை பொருளாதாரத்திலும் கல்வியிலும் சிறக்கவேண்டுமென சிந்திக்கக் கூடாது.

 - தனது பிரதேசம் கல்வியடைவுகளில் மற்றைய பிரதேசங்களைவிட முன்னணியில் திகழவேண்டுமென பாடுபடக்கூடாது.

இவைகளையெல்லாம் பற்று என்று மாலைபோடும் இவர்கள். இவைகளுக்கெல்லாம் சர்வதேச உம்மத் விளங்காத இவர்கள் ஒரு மனிதன் தனது ஊர் பொருளாதார ரீதியாக சுரண்டப்படக்கூடாது, அடிமைப்படுத்தப்படக்கூடாது, நலிவடையக்கூடாது என்று சிந்திப்பதில் என்ன தப்புள்ளது.இதை ஏன் நாம் பிரதேசவாதமென காண்கின்றோம்? இதே வேளை வெளியுர் வியாபாரிகள் முஸ்லிம்கள் அல்லாத மாற்று இனத்தவர்களாக இருந்திருந்தால். இவர்களது நீதியும் தீhப்பும் என்னவாக இருந்திருக்கும் ! ஊடகங்களில் போர்க் கொடியே தூக்கியிருப்பார்கள். தனது ஊர் என்று வருகின்றபொழுது அங்கு முஸ்லிமா?தமிழரா?சிங்களவரா? என்று பார்பது கிடையாது. அங்கு மண்வாசணை மட்டுமே தொழிட்படும்.

ஆனால் துரதிஸ்டம் என்னவென்றாம் எமது ஊரவர்களிடம் ஊர்பற்று என்பது வாய்களிலும் வார்த்தைகளிலும்தான் உள்ளது. ஊர் என்னவானாலும் அதற்கான மாற்று நடவடிக்கை அவர்களிடம் கிடையாது. அது என்ன அழிவை நோக்கிச் சென்றாலும் அதைமுறியடிக்க எதுவும் களத்தில் செய்யமாட்டார்கள். கோட்பாடுகளை மாத்திரம் அள்ளிவீசிக்கொண்டு தமது இயலாமையை மறைக்க மலட்டுவாதங்களை முன்வைத்துக்கொண்டு ரோசமற்றவர்களாகவே இருப்பார்கள். சிலபோது ஊரையும் ஊர் மக்களையும் தமது சொந்த நலனுக்காக காட்டிக்கொடுக்கவும் தயங்கமாட்டார்கள்;. ஒரு ஊரின் ஆளுமை அதன் அங்கு பயன்படுத்ப்படும் மொழியால்தான் வெளிக்காட்டப்படுகின்றது. இது ஒவ்வொரு ஊருக்கு பிரத்தியேகமானது (Unique).இதைத்தான் நாம் மண்வாசனை என்கின்றோம். இதிலும் நாம் பற்றின்மையையே காட்டுகிறோம்.

ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடும்போது எமதூரவர்களிடம் ஊர்பற்று மிகவும் குறைவாகவே உள்ளதை அவதானிக்கமுடிகின்றது. இதனை முன்னுரிமைப்படுத்தி வேலை செய்வதே எமதூரைப் தலைநிமிரச்செய்வதற்கான ஒரே வழியாக அமையும் ! இதனை நோக்கியே தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு பாடசாலை அதிபர்கள், பள்ளி நிருவாகிகள், சமூக ஆர்வலர்கள்,எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள, சமூக - அரசியல் தலைவர்கள் அனைவரையும் பணிவாய் வேண்டுகின்றேன்.

Rate this item
(0 votes)
Login to post comments

Our Team

பார்வையிட்டவர்கள்

808115
இன்று
நேற்று
இவ்வாரம்
கடந்த வாரம்
இம்மாதம்
கடந்த மாதம்
மொத்தமாக
631
2050
4825
793262
37863
40919
808115

உங்கள் IP: 54.87.70.69
2016-10-28 08:13